Home Srilanka இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை!!

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை!!

இலங்கையி ல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நான்கு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும், கென்னியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத்தந்த இரண்டு பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் 7 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 55 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டு சிகிச்சைப்பெற்றுவந்த பெண்னொருவர் இன்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த பெண் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்ததாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் கொட்டிகாவத்த பொதுமயான பூமியில் இன்று இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இறுதிச் சடங்கு நிகழ்வின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் ஒருசிலர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணின் கணவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்றைய தினத்தில் 2 ஆயிரத்து 800 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 5 ஆயிரத்து 707 – PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -