- Advertisement -
Home International கொரோனா ஏதேனும் ஒரு வடிவில் உலகில் தொடர்ந்து கொண்டே இருக்கும்: பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை

கொரோனா ஏதேனும் ஒரு வடிவில் உலகில் தொடர்ந்து கொண்டே இருக்கும்: பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை

- Advertisement -

கொவிட் – 19 தொற்று உலகில் எப்போதும் ஏதோவொரு வடிவத்தில் தொடர்ந்து இருக்குமென பிரித்தானியாவின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் விஞ்ஞானி மார்க் வால்போர்ட் கூறியுள்ளார்.

மக்கள் சரியான இடைவெளியில் தடுப்பூசி எடுத்து கொள்வதன் மூலம் தொற்றிலிருந்து தம்மை தற்காத்து கொள்ளலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் உலகில் இருக்கும் என்று தான் நம்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியதை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலை முடிவுக்கு கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஆனது. அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் பயணம் மூலம் வைரஸ் எளிதில் பரவுகிறது.

1918ஆம் ஆண்டை விட உலக மக்கள் தொகை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

தொற்று நோயைக் கட்டுப்படுத்த, உலகளாவிய ரீதியில் தடுப்பூசி தேவைப்படும், ஆனால் கொரோனா வைரஸ் பெரியம்மை போன்று தடுப்பூசி மூலம் அழிக்கப்படக்கூடிய நோயல்ல.

அது ஏதேனும் ஒரு வடிவில் உலகில் தொடர்ந்து கொண்டே இருக்குமென கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. ‘ஸ்பார்க் எயார்’...

ஒருவர் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது!

ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க...

பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி…!!

இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

கொரோனாவினால் பலியானோர் 10 இலட்சம் பாதிப்புக்குள்ளானோர் தொகை மூன்று கோடி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here