- Advertisement -
Home Srilanka செங்கலடியில் வாள்வெட்டில் 15 வயது சிறுவன் பலி

செங்கலடியில் வாள்வெட்டில் 15 வயது சிறுவன் பலி

- Advertisement -

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 வயது மாணவரொருவர் வாள் வெட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பாடசாலையில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையே இவ்வாறு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தெரியவருகிறது.

செங்கலடி பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவனை, அதே பாடசாலையில் கற்கும் கொம்மாதுறையை சேர்ந்த மாணவன் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான செங்கலடி மாணவனை அவர்களது உறவினர்கள் மற்றைய மாணவனின் வீட்டிற்கு அழைத்து சென்று தாக்கிய விடயம் தொடர்பில் கேட்ட போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கொம்மாதுறையை சேர்ந்தவர்கள் செங்கலடியை சேர்ந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இதன்போது வாள்வெட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவரும் நிலையில் பாரிய வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான செங்கலடியை சேர்ந்த மாணவன் ரமணன் திவ்வியநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இம்மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.

கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச்சென்றுள்ள போதும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாள் ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here