- Advertisement -
Home Srilanka மாகாண சபைத் தேர்தலில் வடக்கு - கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி!!

மாகாண சபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி!!

- Advertisement -

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன.

அந்த அழைப்புக்களைப் பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய நேசக் கட் சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி சம்பந்தமான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்போம்.

நாம் வடக்கு, கிழக்கில் போட்டியிடும்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியாக மாத்திரமே போட்டியிடுவோம். ஐக்கிய மக்கள் சக்தியாக ஒருபோதும் வடக்கு, கிழக்கில் போட்டியிட மாட்டோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொலைபேசி சின்னம் வராது” – என்றார்.

‘வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து போட்டியிடுவீர்களா?’ என மனோ கணேசனிடம் வினவியபோது, “தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எங்களுடைய நேசக் கட்சிதான். அதுபோல் பலநேசக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. அவர்களோடு கலந்தாலோசித்து பயணிப்போம்” – என்று பதிலளித்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here