12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பெரியவர்களைப் போன்ற அதே நிலைமைகளின் கீழ் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முக்கவசங்களை அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் ஆறு முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையில் அவற்றை அணிய வேண்டும் என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் குறிப்பாக மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழலில் முக்கவசங்களை அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆர்வத்தின் அடிப்படையில் ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவுவதைக் குறைக்க உதவும் வகையில் ஜூன் 5 ஆம் திகதி முக்கவசங்களை அணியுமாறு உலக சுகாதார அமைப்பு முதலில் மக்களுக்கு அறிவுறுத்தியது, இருப்பினும் சிறுவர்களுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதலை வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு சீனாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.