Home India தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 73 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 23பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 80 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 6ஆயிரத்து 420 ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 294 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 406பேரும் கோவையில் புதிதாக 389 பேரும் திருவள்ளூரில் மேலும் 384 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -