- Advertisement -
Home India காங்கிரஸ் கட்சியின் பதவியை துறந்தார் சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியின் பதவியை துறந்தார் சோனியா காந்தி!

- Advertisement -

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

மேலும் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, அவர் தனது இராஜினாமா கடிதத்தையும் கட்சியிடம் கையளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான விடயத்தில் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் வலுவாக எழுந்துள்ளன.

அதாவது, நிலையான முழுநேரத் தலைமை தேவை என மறைமுகமாக சோனியா காந்தியின் தலைமைக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதில் மற்றொரு தரப்பினர், சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தலைமையை ஏற்க வேண்டுமென காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

மேலும், அடுத்தடுத்து தேர்தல் வரும் நிலையில், தலைமைப்பதவிப் பிரச்சினைக்கு உரிய தீர்மானத்தை எட்டாதமையினால் காங்கிரஸ் கட்சி பலமற்ற கட்சியாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here