- Advertisement -
Home Sports நாமலின் சிறப்பான பங்களிப்புடன் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி வெற்றி!

நாமலின் சிறப்பான பங்களிப்புடன் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி வெற்றி!

- Advertisement -

களனி பல்கலைகழக கால்பந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி, வெற்றிபெற்றுள்ளது.

களனி கால்பந்து வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணி வெற்றிபெற்றது.

கடுமையான வேலைப்பளுவுடனும் இப்போட்டியில், சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

இதற்காக தற்போது சமூகவலைதளங்களின் ஊடாக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2017ஆம் ஆண்டு முதல் சட்டத் தரணிகள் கால்பந்து கழக அணியில் விளையாடிவரும் நமல் ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற சட்டத் தரணிகள் ஆசிய கால்பந்து கிண்ண தொடரில் பங்கேற்றார்.

இது பார்சிலோனாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டு சட்டத் தரணிகள் கால்பந்து உலகக் கிண்ண தொடரில் பங்கேற்க இலங்கை சட்டத் தரணிகள் அணிக்கு உதவியது.

அத்துடன், சட்டத் தரணிகள் ஆசிய கால்பந்து கிண்ண தொடரின் 2019ஆம் ஆண்டு பதிப்பில் மீண்டும் பங்கேற்க முடிந்தது.

அங்கு சிறப்பாக செயற்பட்டதால், சட்டத் தரணிகள் அணி, போர்த்துக்கல்லில் நடைபெறவுள்ள சட்டத் தரணிகளுக்கான 2021ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற முடிந்தது.

உலகத்தரம் வாய்ந்த அணிகளுடன் போட்டியிட தொடர்ச்சியான பயிற்சி தேவை என்பதால், தற்போது சட்டத் தரணிகள் அணி கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

fodball
 

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here