- Advertisement -
Home Srilanka பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

- Advertisement -

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பயிற்சியாளர்களாக அரச நிறுவனங்களில் அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ”தமது அரசாங்கம் பெப்ரவரி மாதம் இந்த வேலைத்திட்டத்திற்காக பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

2019 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அன்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக இவர்களுக்குரிய நியமனக்கடிதங்களை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் அனைவரதும் விபரங்கள் அதிகாரிகள் பூர்த்தி செய்திருப்பதாகவும்” தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here