மயிலோடு தனக்கு இருக்கும் பந்தம், பாசம் குறித்த காணொளியொன்றை பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த காணொளியை அவர் பதிவிட்டு சில மணிநேரத்திலேயே இலட்சக்கணக்கானோர் அதைப் பார்த்தும், பகிர்ந்தும் உள்ளனர்.
பிரதமர், தான் வசிக்கும் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் மோடி மயில்களை வளர்த்து வருகிறார்.
மயிலுக்காக பிரதமர் மோடி தனது வீட்டில் சில கட்டமைப்புகளை அமைக்கச் செய்துள்ளார். பறவைகள் கூடு கட்ட ஏதுவாக இருக்கும் என்பதற்காகக் குறிப்பிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மோடி, தனது ருவிட்டர், இன்ஸ்டாகிராம், முகப்புத்தகம் ஆகியவற்றில், ஒரு கவிதையுடன் மயிலோடு இருக்கும் காணொளியையும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவேற்றி இருந்தார்.
அதாவது குறித்த கவிதையில் மயிலின் பெருமைகளை விளக்குவதுடன் கண்ணனின் புல்லாங்குழல் இசை பற்றியும் கூறியுள்ளார்.
இவ்வாறு மோடி பதிவேற்றியுள்ள காணொளி மற்றும் கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.