Home Srilanka யாழில் நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆளுனரிடம் மகஜர் கையளிப்பு!!

யாழில் நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆளுனரிடம் மகஜர் கையளிப்பு!!

அரசாங்கத்தினால் 50 ஆயிரம்பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய தோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் இன்று (24) கையளித்துள்ளனர்.

மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக, குறிப்பிடப்பட்டுள்ள EPF, ETF  மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான  மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினைகள் போன்ற 3 விடயங்களை உள்ளடக்கி வட மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளார்கள்.

இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவண செய்யுமாறு கோரி மகஜரினை கையளித்துள்ளனர்.

எனினும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலைமையில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 2 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -