- Advertisement -
Home Srilanka ராஜித மற்றும் ஹேஷ விதானகே ஆகியோருக்கு அழைப்பாணை!!

ராஜித மற்றும் ஹேஷ விதானகே ஆகியோருக்கு அழைப்பாணை!!

- Advertisement -

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி இருவரையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (21) அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ஜூன் மாதத்தில், அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி வழங்கிய முறைப்பாடு குறித்த விசாரணைக்காகவே ராஜித சேனாரத்ன ஆஜராகியிருந்தார்.

கடந்த ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள், நீதித்துறை மற்றும் பொலிஸார் மீதான தலையீடு போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருடம் ஜனவரியில் மாதத்தில் உயர் அதிகாரமுள்ள ஜனாதிபதி அணைக்குழுக்களை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here