Home Srilanka வாகன விபத்தில் தந்தை பலி, மகன் படுகாயம்!!

வாகன விபத்தில் தந்தை பலி, மகன் படுகாயம்!!

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று நேற்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி – காவத்தமுனையிலிருந்து மீன் கொள்வனவுக்காக முச்சக்கர வண்டி ஒன்றில் தெஹியத்தகண்டிக்குச் சென்ற தந்தையும் மகனும் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இருவரும் முச்சக்கர வண்டியில் செல்லும்போது எதிரே வந்த கூலர் வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டமாவடி – காவத்தமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.சின்னத்தம்பி (வயது 60) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற அவரது மகன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -