Home India அணை விவகாரம்; மீண்டும் மோதலுக்குத் தயாராகும் சீனா – இந்தியா?

அணை விவகாரம்; மீண்டும் மோதலுக்குத் தயாராகும் சீனா – இந்தியா?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சீனா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியில் கோஹலா எனும் இடத்தில் அணை அமைத்து ஆயிரத்து 124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் சீன நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் ஒப்பந்தமொன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுமார் 5.8 பில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு கேஷ்மீரில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முசாபராபாத் நகரில் நேற்று இரவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தீப்பந்த பேரணியும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -