- Advertisement -
Home International அபு சயாஃப் குழுவின் கோட்டையில் பாரிய இரட்டைக் குண்டுத் தாக்குதல்!

அபு சயாஃப் குழுவின் கோட்டையில் பாரிய இரட்டைக் குண்டுத் தாக்குதல்!

- Advertisement -

தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெண் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 17 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முதல் குண்டுவெடிப்பு மணிலாவிற்கு தெற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் சுலு மாகாணத்தின் ஜோலோ நகரில் உள்ள வணிக கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ட்ரக்கை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது எனவும், இதைத்தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது எனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள செஞ்சிலுவை சங்கத் தலைவர் ரிச்சர்ட் கார்டன் குண்டு வெடிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

அதிகளவான வெடிமருந்து சாதனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒரு இராணுவ ட்ரக் அருகே சென்றது. முதல் வெடிப்பில் ஐந்து வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்’ என அவர் தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதேவேளை மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிப்பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்டவை என்று அந்நாட்டு இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்பில் உணவு மற்றும் கணினி கடை மற்றும் இரண்டு இராணுவ லொரிகள் சேதமடைந்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ரெக்ஸ் பயோட் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பிலிப்பைன்ஸில் மிகவும் வன்முறையான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அபு சயாஃப் குழுவின் கோட்டையாக ஜோலோ விளங்குகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு குறித்த குண்டு வெடிப்புக்களில் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here