- Advertisement -
Home Sports இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்; போட்டியை சமநிலை செய்ய பாகிஸ்தான் முயற்சி!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்; போட்டியை சமநிலை செய்ய பாகிஸ்தான் முயற்சி!

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், நான்காம் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, நேற்றைய ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், அசார் அலி 29 ஓட்டங்களுடனும், பாபர் அசாம் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி 210 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிரோட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸெக் கிரவ்லி 267 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 152 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயீன் அப்ரிடி, அலாம் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நயீம் ஷா மற்றும் சபீக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 273 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அசார் அலி ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிரோட் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

310 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் இறுதிநாளை இன்று பாகிஸ்தான் தொடரவுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here