Home India ஒடிசாவில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

ஒடிசாவில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளின் இருப்பிடங்களில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மல்கான்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைத் தயார் செய்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய, அப்பகுதிகளிலுள்ள வனப்பகுதி முழுவதும் திடீர் சுற்றிவளைப்பினை பொலிஸார் முன்னெடுத்தனர்.

இதன்போது, மாவோயிஸ்ட்டுகளின் மறைவிடங்களில் இருந்த வெடிமருந்து குழாய்கள், 93 டெட்டனேட்டர்கள், கேஸ் சிலிண்டர்கள், லேத் இயந்திரங்கள், வெல்டிங் இயந்திரங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

மேலும், பொலிஸார் மீது எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தும் பொருட்டு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கும் ஆயுதங்களை சரி செய்வதற்கும் மாவோயிஸ்டுகள் இந்த இடத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என மல்கான்கிரி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்கான்கிரி மாவட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -