Home Srilanka கல்கிஸ்ஸை கடற்கரையில் காணாமல் போன மற்றுமொரு இளைஞரின் சடலம் மீட்பு!

கல்கிஸ்ஸை கடற்கரையில் காணாமல் போன மற்றுமொரு இளைஞரின் சடலம் மீட்பு!

கல்கிஸ்ஸை கடற்கரையில் காணாமல் போன மற்றுமொரு இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை கடற்கரையில் நேற்றுமுன்தினம் நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஐவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து காணாமல் போன இரு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் நேற்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் பூண்டுலோயாவைச் சேர்ந்த இளைஞர்களில் இரண்டாவது இளைஞரின் சடலம் நேற்று வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட இளைஞர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -