தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தே.மு.தி.க பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவர் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
இதனிடையே, அண்மைக்காலமாக இவர் சீரற்ற நிலையில் இருந்ததாகவும் தற்போது இவரின் உடல்நிலை நாளுக்கு நாள் குணமடைந்து வருவதாக இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.
மேலும், இவரின் குரலில் ஏற்பட்டிருந்த பிரச்சினையும் சரி செய்யப்பட்டு வருவதாக இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.