குருணாகல் மேயர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான பிடியாணையை அமுல்படுத்துவதை இடை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருணாகலில் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவையாக இருந்ததாக கூறப்படும் இடத்திலிருந்த பழைமை வாய்ந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில், அவர்களை இவ்வாறு கைதுசெய்யுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.