- Advertisement -
Home Srilanka ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவு; உயர் நீதிமன்றம்!

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவு; உயர் நீதிமன்றம்!

- Advertisement -

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த வழக்குத் தொடர்பான விசேட தெளிவுபடுத்தல் விடயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் வாய்மூல சமர்ப்பணம் நேற்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, சிசிர டி அப்ரு, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வாய்மூல சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் முறைப்பாட்டின் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாக்க சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல...

பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு...

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here