Home Srilanka 11 வயது குழந்தையொன்றின் தாய் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

11 வயது குழந்தையொன்றின் தாய் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

கூரிய ஆயுதத்தினால் தாக்கி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பியகம-பேரகஸ்ஹந்திய-மல்வத்த வீதி பகுதியில் வீட்டில் இருந்தபோதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 39 வயதுடையவர் என்பதோடு, இவர் 11 வயது குழந்தையொன்றின் தாய் என்பது முதல் கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரையும் மற்றும் இன்னொரு நபரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -