- Advertisement -
Home Srilanka 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யமுடியாது: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யமுடியாது: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

- Advertisement -

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13வது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்க தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

13வது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபை தேர்தலில் தங்கியுள்ளது. மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்யலாம் ஆனால் 13வது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது.

இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவே அரசியலமைப்பின் 13வது திருத்தம் இந்நியாவின் தலையீட்டினால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் நட்பு மற்றும் நேச நாடாக இந்தியா காணப்படுகிறது. ஆகவே இவ்விடயத்தை இந்தியா கூர்ந்து கவனிக்கும்.

மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால், அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் தற்போது எழுந்திருக்காது.

நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தோன்று உரிய காலத்தில் இடம் பெறவிருந்த மாகாண சபை தேர்தலை பிற்போட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கியது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here