- Advertisement -
Home Srilanka அரச காணிகளை பராமரித்தவர்களுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு

அரச காணிகளை பராமரித்தவர்களுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு

- Advertisement -

ஜனாதிபதியின் காணி இல்லாதோருக்கு காணி வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக அரச காணிகளை பராமரித்து வந்த மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக அரச காணிகளை பராமரித்து வந்த மக்களுக்கு முதல் கட்டமாக காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக கணக்காளர் ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட், செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

காணி இல்லாதோருக்கு காணி அனுமதிப் பத்திரம் நாடளாவிய ரீதியில் வழங்கும் திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதல் கட்டமாக நூறு பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளை பராமரித்து வந்த ஏனைய மக்களுக்கும் அனுமதிப் பத்திரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த காணிகளை தங்களின் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும், அதனை பயன்படுத்த முடியாத பட்சத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியுமே தவிர காணியை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் மேலும் தெரிவித்தார்.

watermarked 01 2 watermarked 01 3 watermarked 01 4 watermarked 01 7

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமிக்கப்படவில்லை! பொலிஸ் ஆணைக்குழு

இலங்கையின் பொலிஸ் துறையில் முதல் தடவையாக பெண் துணை காவல்துறை அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இந்த பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்று ஆணைக்குழு...

பலாங்கொடையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி! விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

பலாங்கொடை - ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த 26ம் திகதி இறக்குவானை பகுதியில் வைத்து...

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here