Home India இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – ராஜேஷ் பூஷண்

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – ராஜேஷ் பூஷண்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை எண்ணிக்கைக்கும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதம் ஒகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் 11 சதவீதமாக இருந்தது. தற்போது அது 8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் விகிதம் குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை முதல் முறையாக 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 423 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோரில் 2.70 சதவீதம் பேருக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 1.92 சதவீதம் போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது தொடா்பாக இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த மருந்து தொடா்பான முதற்கட்ட விவரங்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. அது குறித்த விரிவான விவரங்களை ரஷ்யாவிடம் கோரியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -