Home Srilanka ஒரு வாரத்தில் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்ட மூவர்!!

ஒரு வாரத்தில் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்ட மூவர்!!

இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் கடந்த வாரத்திற்குள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இவர்களில் இருவர் கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் தடைசெய்யப்பட்ட மதுவுக்கு அடிமையானவர் எனவும் அவர் கூறியுள்ளார். மற்றைய நபர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்.

மூன்றாவது கைதி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த நபரும் போதைப் பொருளுக்கு அடிமையாகி கல்லீரல் பாதிக்கப்பட்டவர் எனவும் உபுதல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -