- Advertisement -
Home Srilanka கிழக்கில் 466 பேரை ஆசிரிய ஆலோசகர்களாக நியமிக்க அனுமதி!

கிழக்கில் 466 பேரை ஆசிரிய ஆலோசகர்களாக நியமிக்க அனுமதி!

- Advertisement -

கிழக்கு மாகாணத்தில் 466பேரை ஆசிரிய ஆலோசகர்களாக நியமிக்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிஸாம் தெரிவித்தார்.

கல்விப்புலத்தில் புதிதாக இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் அதன் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்…
கல்வியமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆசிரிய ஆலோசகர் சேவைப் பிரமாணக்குறிப்பிற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரிய ஆலோசகர்களை புதிய சேவையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அனுமதி வழங்கப்பட்ட 466 பேரில் 370 பேர் தமிழ் மொழி மூலமும் 96 பேர் சிங்கள மொழி மூலமும் தெரிவாகவுள்ளனர். அதற்காக கிழக்கிலுள்ள 15 தமிழ் 5 சிங்கள மொழிமூல மொத்தமாக 17கல்வி வலயங்களிலும் தற்போதுள்ள ஆசிரிய ஆலோசகர்களது தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

இவர்களில் சிலர் போட்டிப்பரீட்சைமூலமாகவும் சிலர் தற்காலிக அடிப்படையிலும் நியமனம்செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களுள் தகுதியானவர்களை ஆசிரிய ஆலோசகர் சேவை பிரமாண குறிப்பிற்கமைவாக உள்ளீர்க்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களை 17 கல்வி வலயங்களுக்கும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏலவே வலயத்துள் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்நியமனம் புதிய சேவைப்பிரமாணத்தின்படி எந்தவொரு வலயத்திற்கும் நியமிக்கப்படுவதற்கு வகைசெய்துள்ளது. என்றார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here