- Advertisement -
Home Srilanka செப்டம்பர் 15 முதல் யாழ்.நகரத்தில் பொலித்தீனுக்கு தடை!

செப்டம்பர் 15 முதல் யாழ்.நகரத்தில் பொலித்தீனுக்கு தடை!

- Advertisement -

யாழ். மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் பொலித்தீன் தடையை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் நிறைவேற்றுவதற்கு சபை நேற்று அனுமதி வழங்கியது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் தீர்மானம் மாநகர சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும் அப்போது வர்த்தகர்கள் மற்றும் உணவகங்களின் கோரிக்கையின் பெயரில் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தினை மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் முடிவு நேற்றையதினம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலமையில் இடம்பெற்ற சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் இருப்பதனால் உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் உடன் மாற்று பாவனைப் பொருளாக வாழை இலை தாமரை இலை, தேக்கம் இலை, வாழை மடல் போன்றவற்றை தயார் செய்யமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொலித்தீனைத்தடை செய்து, வாழை இலை போன்றவற்றைப் பயன்படுத்துமாறு கோரியசமயம் உடனடியாக மாற்று ஏற்பாட்டினை செய்ய முடியாது, சிறிது கால அவகாசம் தேவை என வர்த்தக சங்கம் ஊடாகவும் நேரிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

(யாழ் லக்சன்) யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(21.09.2020)மாலை 04.30...

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுனர்

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...

அதாவுல்லாவின் உடையால் சபையில் வெடித்தது சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து...

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப்பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுருஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப்பொருள் 33, 17 கிராம்,...

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here