Home India மஹாரஷ்ட்ரா கட்டட விபத்து; 3ஆவது நாளாக மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

மஹாரஷ்ட்ரா கட்டட விபத்து; 3ஆவது நாளாக மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற கட்டட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் 3ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 30 பேரையும் மீட்கும் பணிகள் 3 ஆம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் அமைந்துள்ள காஜல்புரா எனும் இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -