Home Srilanka யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்புடன் சேவையில் ஈடுபட்ட போதிலும், தொழிற்சங்கமொன்று தம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்களை கண்டித்தும், நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய அனைவரும் , கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -