- Advertisement -
Home Srilanka ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு…!

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு…!

- Advertisement -

கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4021, 4022, 1001 மற்றும் 1002 ஆகிய 4 ரயில் சேவைகளையும் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

கல்கிஸ்ஸை – கொழும்பு கோட்டை முதல் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரை அதிகாலை 5.10 க்கு பயணிக்கும் 4021 இலக்க ரயில் மற்றும் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை முதல் கல்கிஸ்ஸை – கொழும்பு கோட்டை வரை பிற்பகல் 1.15 க்கு பயணிக்கும் 4022 இலக்க ரயில் ஆகிய ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த ரயில் சேவைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் செப்டெம்பர் முதலாம் திகதி வரை உரிய நேரத்தில் பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன், கொழும்பு கோட்டை முதல் பதுளை நோக்கி பயணிக்கும் 1001 இலக்க ரயில், எதிர்வரும் 28, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் காலை 6.45க்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

மேலும், பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1002 இலக்க ரயில் எதிர்வரும் 29, 31 மற்றும் செப்டெம்பர் 01 ஆகிய திகதிகளில் காலை 6.45க்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ரயில் சேவைகளில் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here