Home International வடகொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிம் ஜாங்-உன் அறிவிப்பு!

வடகொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிம் ஜாங்-உன் அறிவிப்பு!

வடகொரியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அந்த நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய அரசாங்க செய்திச் சேவையான KCNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கெய்சோங் நகரில் அண்மையில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த நகரம் முடக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 3 வாரங்களுக்குப் பின்னர் கெய்சோங் நகரின் முடக்க செயற்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வட கொரியாவில் இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றாளரும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -