- Advertisement -
Home Srilanka விஜயலட்சுமி தொண்டமான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை – இ.தொ.கா

விஜயலட்சுமி தொண்டமான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை – இ.தொ.கா

- Advertisement -

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜயலட்சுமி தொண்டமான் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து இ.தொ.காவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் ” விஜயலட்சுமி தொண்டமானின் அரசியல் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இ.தொ.காவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் போலி தகவல் பரப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவித்தல் இன்னும் வெளியாகிவில்லை. அது தொடர்பில் இ.தொ.கா. எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. எனவே, போலியான தகவல்களை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். உரிய நேரத்தில் – உரிய முடிவுகளை எடுத்து – உரிய வகையில் மக்களுக்கு அறிவிக்கும் அரசியல் இயக்கமே இ.தொ.காவாகும்.” – என்றுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...

ஹர்த்தாலுக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம்...

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here