இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா டெப்லிட்ஸ் திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன் இளைஞர் குழுக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த நிகழ்வு நேற்று (26.08.2020) திருகோணமலையில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட நிலவரம் தொடர்பிலும் தங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் போதான சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்ட உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் தூதுவராலயம் ஊடாக பல திட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பிலும் பேசினார்.
இதில் உயர்ஸ்தானிகர் தூதுவராலயத்தின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.