துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் கர்ப்பிணி என்பதுடன், அவர் தற்போது முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த இவர் சுயதனிமைப்படுத்தலுக்குஉட்பட்டு இருந்தார்.
இந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சிலாம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் கே.பி. மல்லவராச்சி தெரிவித்தார்
குறித்த கர்ப்பிணிப் பெண் பங்கதெனியவில் வசிப்பவராவார்.
இவர் சிலாபத்தில் உள்ள கொரோனா பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.