- Advertisement -
Home Srilanka “எனது அனுமதியின்றி அவ்வாறு செய்ய முடியாது” சபாநாயகர் அறிவிப்பு

“எனது அனுமதியின்றி அவ்வாறு செய்ய முடியாது” சபாநாயகர் அறிவிப்பு

- Advertisement -

எனது அனுமதியின்றி கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் விசேட அனுமதியின்றி, கோப் குழுவில் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எவரையும் அழைக்க முடியாது.

இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அழைக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் இதன்போது அநுர கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

அவ்வாறான அறிவித்தல் எதும் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள விடயம் தொடர்பிலும் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு எழுத்து மூலம் பதிலளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கூறியுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. ‘ஸ்பார்க் எயார்’...

ஒருவர் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது!

ஒரு நபரால் வாங்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நபர் தனது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க...

பிரதமர் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி…!!

இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

கொரோனாவினால் பலியானோர் 10 இலட்சம் பாதிப்புக்குள்ளானோர் தொகை மூன்று கோடி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here