- Advertisement -
Home Srilanka ஒன்றரை இலட்சம் வேலைவாய்ப்பு; மலையக பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் – அரவிந்தகுமார்!

ஒன்றரை இலட்சம் வேலைவாய்ப்பு; மலையக பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் – அரவிந்தகுமார்!

- Advertisement -

அரசின் ஒன்றரை இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கும் திட்டத்தில் மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\

“கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இரு பிரதான வேட்பாளர்களும் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தனர்.

இறுதியில் வெற்றிபெற்ற தற்போதைய ஜனாதிபதி 11 மாதங்கள் கடந்தும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தற்போது ஒன்றரை இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதில் மலையக பட்டதாரிகளும், பட்டம் பெறாதவர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவிற்கமைய கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நியமனம் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட 6,548 திட்டமிடல் உதவியாளர்களை கடமைக்கு சமூகமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், கடந்த ஆட்சியில் நியமனங்கள் வழங்கப்பட்ட 1,300 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here