Home Srilanka கடற்பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 48 பேர் கைது

கடற்பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 48 பேர் கைது

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கை உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 48 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு ,கிழக்கு, மேற்கு வட மத்திய , ஆகிய மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது திருகோணமலை எலிசபத் மற்றும் நோர்வே கடற்கரை பகுதி. தலைமன்னார் மண்டைத்தீவு மற்றும் இலுப்பைக்கடவை ஆகிய கடற்பகுதிகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,மேலும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் 11 சட்டவிரோத மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 165 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், யாழ்ப்பாணம், குச்சவெலி.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -