Home Sports கரீபியன் பிரீமியர் லீக்: பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சிறப்பான வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக்: பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சிறப்பான வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 36 ஓட்டங்களால், வெற்றிபெற்றது.

ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜமைக்கா தலாவாஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கெய்ல் மேயர்ஸ் 85 ஓட்டங்களையும், சான்ட்னர் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் முஜிப் 3 விக்கெட்டுகளையும், லெமேச்சன் 2 விக்கெட்டுகளையும், எட்வட்ஸ் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 149 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனால் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, போனர் 31 ஓட்டங்களையும், ஜெரமைன் பிளக்வுட் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர், ஜேஸன் ஹோல்டர், ராஷித் கான் மற்றும் ரெய்மன் ரெய்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெய்டன் வோல்ஷ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கெய்ல் மேயர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -