Home International குறைந்த வருமானம் பெறுவோருக்கு சுய தனிமைப்படுத்தலுக்காக 182 பவுண்டுகள் வரை கோரலாம்!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு சுய தனிமைப்படுத்தலுக்காக 182 பவுண்டுகள் வரை கோரலாம்!

கொரோனா வைரஸின் அதிக தொற்றுவீதங்கள் உள்ள இங்கிலாந்தின் சில பகுதிகளில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமானால் 182 பவுண்டுகள் வரை கோர முடியும்.

செவ்வாய்க்கிழமை முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாதவர்கள் Universal Credit, Working Tax Credit மூலம் பணத்தைப் பெற முடியும்.

இது முதலில் வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் சோதனை செய்து பார்க்கப்படும். ஒரு நாளைக்கு 13 பவுண்டுகள் கோரலாம்.

கிரேட்டர் மன்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம், ‘இந்த கட்டணம் போதுமானதாக இல்லை என்றும், மக்களுக்கு முழு ஊதியம் தேவைப்படுகிறது’ என்றும் கூறினார்

10 நாட்கள் சுய தனிமைக்கு 130 பவுண்டுகள் ஆகும். ஆனால் வீட்டு உறுப்பினர்கள் தற்போது 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஆகவே அவர்கள் 182 பவுண்டுகள் வரை பெறுகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -