Home Srilanka சிற்றூந்து மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்

சிற்றூந்து மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்

காவற்துறை கட்டளையை மீறி பயணித்த சிற்றூந்து ஒன்றுக்கு திவுலப்பிட்டிய காவற்துறை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று அதிகாலை திவுலப்பிட்டி தனகஹ சந்தியில் வைத்து காவற்துறையின் கட்டளையினை மீறி பயணித்த சிற்றூந்து மீதே இவ்வாறு காவற்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் சிற்றூந்து நிறுத்தாமல் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -