Home Sports டுவைன் பிராவோ புதிய சாதனை!

டுவைன் பிராவோ புதிய சாதனை!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் Dwayne Bravo இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தனது 459 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போதே அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார்.

Caribbean Premier League போட்டியில் Trinbago Knight Riders அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, தனது 500 ஆவது விக்கெட்டாக Rakheem Cornwall ஐ வீழ்த்தியுள்ளார்.

மேலும் தனது 100 ஆவது Caribbean Premier League ஆட்டத்தில் இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மலிங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 320 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -