- Advertisement -
Home India தாய், மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர்: அமெரிக்காவில் கைது

தாய், மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர்: அமெரிக்காவில் கைது

- Advertisement -

தாய், மனைவி இருவரையும் கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர் இக்பால் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றவர். 62 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணம் டெலாவேர் கவுண்ட்டியில் வசிப்பவராவார்.

மனைவியையும் தாயாரையும் கொன்றதாக அவரே ஒப்புக் கொண்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இக்பால் சிங் வீட்டுக்கு போலீஸ் வந்த போது இக்பால் சிங் இரத்தத்தில் நனைந்திருந்தார். மேலும், தன்னைத்தனே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் உள்ளே இரண்டு பெண்களின் சடலங்கள் தெரிந்ததையடுத்து, இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை என்பதாலும், செயலின் கொடூரத்தன்மையினாலும் இவருக்கு பிணை மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் வைத்துக் கொண்டதாக தெரியவில்லை.ikpalsing

தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அங்கு போலீஸ் காவலிலேயே இருந்துள்ளார். தாயார் நசீப் கவுர் தொண்டையை அறுத்தும், மனைவி ஜஸ்பால் கவுர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும், சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்தனர். ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னமும் தெரியாத நிலையில், இக்பால் சிங் கொலையை செய்து விட்டு தன் மகனுக்கு தொலைபேசியில், நான் உன் அம்மாவையும் பாட்டியையும் கொலை செய்து விட்டேன், போலீஸைக் கூப்பிடு என்று கூறியுள்ளார். பிறகு மகளையும் அழைத்து இதே போல் பேசியுள்ளார் இக்பால் சிங். அப்போதுதான் வீட்டுக்கு வந்த போது இக்பால் சிங் செய்த கொடுஞ்செயல் தெரியவந்தது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here