- Advertisement -
Home Srilanka நாடாளுமன்றில் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் உரை!

நாடாளுமன்றில் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் உரை!

- Advertisement -

நல்ல சுபீட்சத்தின் நோக்கு என்கின்ற வேலைத் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு இந்த அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது பிரதமர் உரையாற்றுகையில், “கடந்த பெப்ரவரி மாதத்தில் கடன்களை செலுத்துவதற்கு கோரியிருந்தேன் ஆனால் அன்று எதிர்க்கட்சி அதற்கு இடையூறு செய்தது. இதனால் தாமதல் ஏற்பட்டது.

இந்த பின்னணியில் தான் இன்று 2020ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு செப்டெம்பரில் இருந்து டிசம்பர் வரையான நான்கு மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை செய்வதற்கு 1900 பில்லியன் ஒதுக்குவதற்கும் அதற்காக 1300 பில்லியன் கடன் எல்லையை அங்கீகரிப்பதற்காகத்தான் இந்த குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்றது. இந்த எல்லா குறைநிரப்பு பிரேரணையும் 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தின்மூலம் நாங்கள் எதிர்காலத்தில் சமர்ப்பிப்போம்.

2019ஆம் ஆண்டு செலுத்தப்படாத பட்டியலை செலுத்துவதற்கு பெருமளவு தொகை தேவைப்படுகிற்னது. இதன்படி அரசாங்கத்தின் செலவு ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்து அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட துண்டுவிழும் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி முதலீட்டு மேம்பாட்டை செய்வதற்கு அடிப்படையிலேயே நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்தின் செலவைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பது எமது நம்பிக்கையான உள்ளது.

நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைறேறுகின்ற அரசாங்கமாக இருக்கின்றோம். தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளாக ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களுக்குள் செய்திருக்கின்றோம்.

இந்த அரசாங்கததை பொறுப்பேற்ற போது குண்டூசியில் இருந்து பெரிய பொருட்கள் வரை எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டன. புளி மட்டும் அல்லாது சுதேச கைத்தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலே பத்தி, மஞ்சள், மிளகு கூட இறக்குமதி செய்யப்பட்டன. பட்டங்கள் வெசாக் கூடுகள் கூட இறக்குமதி செய்யப்பட்டன. இதன்மூலம் உள்நாட்டு கைத்தொழிலாளர்கள் ஊக்கமிழக்கச் செய்யப்பட்டனர்.

கடந்த காலங்களிலே எமது வெளிநாட்டு கையிருப்புக்கள் உண்மையிலேயே தேவையில்லாத பொருட்களை இறக்குமதி செய்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த பின்னணியில் எமது செலாவணி விழுக்காடு தேவையற்ற விதத்திலே ஏற்ற இறக்கம் கண்டன. இதன் விளைவை இன்று நாம் பார்க்கின்றோம்.

செலாவணி விழுக்காடை உறுதியான மட்டத்திலே பேணுவதற்கு எங்களால் முடிந்திருக்கின்றது. எமது உள்நாட்டு தொழில் முனைவோர்கள் கைத்தொழிலாளர்கள் என்று எல்லோரையும் வலுவூட்ட வேண்டியிருக்கின்றது. அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்றது. நல்ல புரிதலுடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்றது.

நல்ல சுபீட்சத்தின் நோக்கு என்கின்ற வேலைத் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு இந்த அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு அனைவரிடமும் வேண்டுகொள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here