Home Srilanka நீர்த்தேக்கத்தில் குதித்து இளம் யுவதி தற்கொலைக்கு முயற்சி

நீர்த்தேக்கத்தில் குதித்து இளம் யுவதி தற்கொலைக்கு முயற்சி

ராஜாங்கனை நீர்த் தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த இளம் யுவதி ஒருவரை நேற்று (26) தம்புத்தேகம பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நொச்சியாகம, ஒலுவௌ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதியே மன விரக்த்தியில் தற்கொலை செய்யும் நோக்கில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

இதன்போது, அங்கு கமையில் இருந்த தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உடனடியாக செயற்பட்டு, நீர்த்தேக்கத்திற்குள் பாய்ந்த இளம் யுவதியை பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த யுவதி மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தற்கொலை செய்ய முயற்சித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தம்புத்தேகம பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -