Home Sports நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்!

நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்!

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

குறித்த காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஜேர்மனியின் ஜோன் லெனார்ட் ஸ்ட்ரஃப்பும் (john lernard struf) பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த நிலையில், நோவக் ஜோகோவிச், செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -