Home Srilanka பதவியில் இருந்து நீக்கப்பட்ட மாத்தளை மேயர் டல்ஜித் அலுவிகார!!

பதவியில் இருந்து நீக்கப்பட்ட மாத்தளை மேயர் டல்ஜித் அலுவிகார!!

மத்திய மாகாண சபை ஆளுநர் லலித் யு.கமகே, மாத்தளை மேயர் டல்ஜித் அலுவிகாரவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பினையும் மத்திய மாகாண ஆளுனர் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை மாத்தளை நகர சபையின் துணை மேயர் சந்தானம் பிரகாஷுக்கு மேயரின் கடமைகளை உடனடியாக அமுல்படுத்துவதற்கான அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட மாத்தளை மேயர் தல்ஜித் அலுவிஹர தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -