Home Uncategorized மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக விசேட திட்டம் அறிமுகம்

மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக விசேட திட்டம் அறிமுகம்

மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் “மட்டு முயற்சியான்மை 2020” எனும் விசேட திட்டம் மாவட்டரீதியில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மன்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களினை ஊக்குவிக்கும் முகமாக பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது

இந்த கண்காட்சி சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோதினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது

குறித்த கண்காட்சியினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா திறந்து வைத்தார்

மேலும் இந்த கண்காட்சி நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர்களான திருமதி. லக்ஷன்யா பிரசாந்தன், ஜீ. அறுணன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். பிரனவசோதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதர்சன், கணக்காளர் எஸ். புவனேஸ்வரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரீ. சத்தியசீலன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன், மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -