- Advertisement -
Home Srilanka மரணித்த சிசுவின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்று உத்தரவு; முஸ்லிம் தாய்மார் குறித்து சிஐடி...

மரணித்த சிசுவின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்று உத்தரவு; முஸ்லிம் தாய்மார் குறித்து சிஐடி விசேட விசாரணை!

- Advertisement -

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி சிஷேரியன் சத்திர சிகிச்சை செய்த பின்னர் பிரசவிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தையின் சடலத்தை நாளை தோண்டியெடுக்க குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி சிஷேரியன் சத்திர சிகிச்சை செய்த தாய் ஒருவர் பிரசவித்ததாக கூறப்படும் சிசு இரு நாட்களில் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தாய் ஒருவர் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய குருணாகல் பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தை குருணாகல் நீதிவானுக்கு பிரத்தியேக வழக்காக தாக்கல் செய்துள்ள பொலிஸார் அந்த வழக்கில் சந்தேக நபர்கள் எவரையும் பெயரிடாத போதும் உயிரிழந்த சிசுவின் சடலத்தை மீள தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நேற்று அனுமதி பெற்றுக்கொண்டனர்.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த சிசுவின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் குருணாகல் நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சுமனவீர குறித்த குழந்தை பிறந்து இரு நாட்களில் உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் காலில் தழும்பொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிசுவின் தாய் தனக்கு குறித்த பிரசவமானது சிசேரியன் சிகிச்சை ஊடாக இடம்பெற்றதாகவும், அதனை வைத்தியர் ஷாபியே செய்ததாகவும் தெரிவித்துள்ள நிலையில் சிசுவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக முறைப்பாடளித்துள்ளார். என நீதிவானுக்கு விசேட அறிக்கையையும் சமர்ப்பித்து தெளிவுபடுத்தினார்.

அத்துடன் சட்ட வைத்திய அதிகாரிகளும் நீதிவான் குறிப்பிடும் நேரத்தில் அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்ட நிலையிலேயே நாளை வெள்ளிக்கிழமை குறித்த சிசுவின் சடலத்தை மீள தோண்டி எடுக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி முஸ்லிம் தாய்மார்களுக்கு முன்னெடுத்த சிசேரியன் சத்திர சிகிச்சைகள் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசத்துக்கு அறிவித்தது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...

வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...

சடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி

நானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...

சஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...

20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here