அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வழங்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக வழங்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், குறித்த திகதியை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாடசாலை சீருடைகளை பெற்றுக் கொள்வதற்கான குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை கல்வி அமைச்சு நீடித்துள்ளதாக, ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.